|
Post by ரமேஷ் on Sept 14, 2013 13:10:39 GMT 5.5
விண்டோஸில் File Extension களை மாற்றுவது எப்படி?
|
|
|
Post by அருண்பிரசாத் on Sept 14, 2013 13:12:35 GMT 5.5
சில நேரங்களில் நமக்கு நாம் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட File ஒன்றின் Extension -ஐ மாற்ற வேண்டி வரும். உதாரணமாக ஜிமெயிலில் நம்மால் .exe போன்ற File களை இணைத்து மின்னஞ்சல் செய்ய முடியாது. அப்போது Extension -ஐ மாற்றி நாம் மின்னஞ்சலில் Attach செய்ய முடியும்.
இதே போல பல சமயங்களில் File Extension மாற்ற வேண்டி வரும். எப்படி மாற்றுவது என்று பார்ப்போம். Windows XP Users: 1. ஏதேனும் ஒரு Folder ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது Menu வில் Tools என்பதை கிளிக் செய்து Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள். 2. இப்போது வரும் சிறிய விண்டோவில் View Tab – இல் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்து விடுங்கள். ஏற்கனவே Uncheck ஆகி இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள். 3. இப்போது குறிப்பிட்ட File ஐ Rename செய்யும் போது Extension என்ன உள்ளதோ அதை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். Windows 7 Users: Organize>> Folder and Search options>> View( in the pop up window) இதில் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்ய வேண்டும். Windows 8 Users: View >> File Name Extensions என்பதை Check செய்ய வேண்டும். [கவனிக்க இதில் Enable செய்ய வேண்டும்.]
அவ்வளவே. இதே போல எந்த File க்கு வேண்டும் என்றாலும் மாற்றலாம். தேவைப்படும் போது மீண்டும் ஒரிஜினல் Format க்கு மாற்றிக் கொள்ளலாம். தெரியும் File Extension ஐ மறைக்க மேலே சொல்லி உள்ளபடி வந்து இப்போது முன்பு இருந்ததை போல மாற்றி விட வேண்டும்.
|
|