|
Post by பாலாஜி சந்திரன் on Sept 13, 2013 17:50:43 GMT 5.5
அடிக்கடி ஸ்கை டிரைவ் என்ற பெயரை கேள்விப்படுகிறேன் என்ன அது
|
|
|
Post by G.S.Narayanan on Sept 13, 2013 17:51:42 GMT 5.5
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ஸ்கை ட்ரைவ் ஆகும். விண்டோஸ் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது. நாம் விண்டோஸ் 8 சிஸ்டம் வாங்கும்போதே, நமக்கு ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி இடம் ஒதுக்கப்படுகிறது. நம் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்தால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும் அதில் ஸ்டோர் செய்யப்படுகிறது. அப்டேட் செய்யப் படுகிறது. எனவே, நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உருவாக்கும் பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தும், விண் 8 சிஸ்டம் பயன்படுத்தும் எந்த சாதனத்தின் வழியாகவும் பெற்று பயன்படுத்தலாம். இந்த வழிமுறையை (“Fetching”) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. தமிழில் “தருவித்தல்’ என அழைக்கலாம். ஸ்கை ட்ரைவில் நாம் கட்டாயமாக நம் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டியதில்லை. நாம் விரும்பினால் மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
|
|